Saturday, August 24, 2013

என் சிந்தனை தாளின் ஒரு பக்கம்

என் சிந்தனை தாளின் ஒரு பக்கம்
நீ சிந்திய சிரிப்பினை பதிவு செய்வேன்
நீ நாணும் அழகை வரைந்து வைபேன்
உன் கோபக் கணலைக் கொட்டி வைப்பேன்
உன் ஆசையைப் பட்டியல் போட்டு வைப்பேன்
இத்தனையும் நான் சேகரித்து என்
உயிர் நூலின் முகவுரை ஆக்கி வைப்பேன்

Monday, August 6, 2012

கற்றுக்கொடுங்கள் உங்கள் பிள்ளைக்கு


பென்னின் நிலை காட்டி மிதிக்க அல்ல‌
அவள் அறிவை மதிக்க கற்றுக்கொடுங்கள்
ஆடையின் பகட்டிலே கிட்டாது புகழ், வாழ்வின்
நடையிலே கிட்டும் என்று கற்றுக்கொடுங்கள்

சிருமையும் பெருமையும் ஜாதியில் இல்லை
மனத்திலே இருக்குதென்று கற்றுக்கொடுங்கள்
கொலையினும் கொடியதோர் குற்றம் உண்டெனில்,
அது துரோகம் என்று கற்றுக்கொடுங்கள்


சோற்றுக்குத் தான் பணம் தேவை,
சோகத்துக்கு தேவை நட்பென்று கற்றுக்கொடுங்கள்
உவகையும், உணவும், அறிவும், பள்ளியில்
பகிற்ந்து கொல்லக் கற்றுக்கொடுங்கள்

தாயை மதித்தால் மட்டும் போதாது,
தாய் மொழியையும் மதிக்கக் கற்றுக்கொடுங்கள்
பாடம் ப‌டித்தால் மட்டும் போதாது, குறைந்தது
ஒரு கலையேனும் கற்றுக்கொடுங்கள்

ப‌ணம் மட்டும் இல்லை, நட்பும், உறவும்
சொத்தென்று கற்றுக்கொடுங்கள்
காசே குரியென்று பாயும் அம்பாக அல்ல,
வாழ்வையும் ரசிக்க கற்றுக்கொடுங்கள்

Sunday, April 8, 2012

போர்க் களம் - ஒரு வீரனின் கதை


லாடங்கள் தாளமிட, புழுதி விண்ணை மரைத்திட‌
ஈட்டியின் கூர்மையால் ததகத்திற்க்கு நோக‌
புரவியின் வேகம் கண்டு புயலும் நாணியது
புரமுதுகிட்டு மறுபக்கம் ஓடியது,

மரத்தில் கட்டிய கயிரை ஆட்டினாலும்,
முடியின் நிலை மாறாததுபோல்,
குதிரையின் மேல் உடல் ஆடினாலும்,
கண் குறியின் நிலை மாறாதன்றோ,

புயல் எழுப்பும் அலைபோல்,
காட்டுக் காரா மந்தை போல்
மிரட்டி வரும் எதிர் படையுடன்
உரசிடுவார் ஓரிரு நொடிகளில்

அநிகம் இரண்டும் மோதும் ஒலி கேட்டு
முகிலும் செவிகளை மூடிக்கொண்டது
தனது இடியின் ஒலிக்கு மிகையில்லை என்ற‌
அகந்தை அப்போது முறிந்து போனது,

ஈட்டியை மாரில் ஏற்றியதும் உருவியதும்
இமைக்கும் பொழுதினும் சற்று குறைந்தே இருந்தது
அவன் இடது கை கேடையம் வாள் வீச்சைத் தடுதிட
எதிர் வீரனின் தொண்டையில் ஈட்டி குடியேரியிருந்தது

மன்னன் மடிந்தால் முடிந்திடும் போரென
முதுகில் தாக்கவே ஓடினான் ஒருவன்,
எரிந்தான் ஈட்டியை கயவன் மார் பிள‌ந்திட
முடியரசன் உயிர் காத்தான் நாட்டை காத்திட

நொடியில் உருவினான் உரைவாளை உடனே
சீறிய காளை அவன் மீது பாய்வது கண்டு
உருண்டது தலையென்று நினைதான் ஆனால்
தடுத்திருந்தான் அக்காளை தன் வாள் கொண்டு

பகைவன் வீசிய மறுவீச்சை தடுத்திட,
தவிறினால் பிளந்திருக்கும் தன் தலையென உணர்ந்தான்,
இப்படி ஒரு வீரனை இதுவரை கண்டதில்லை
வெல்வது அவனை அவ்வள‌வு எளிதில்லை

குதிரைகள் இடித்துக்கொள்ள நிலையிழந்தான் அவன்
கைகள் விடுபட‌ இடரி விழுந்தான்
இவன் நொடியில் அவனுயிர் குடித்திருப்பான்
ஆனால் வீரத்தை மதித்திடவே முடிவெடுத்தான்

தானும் குதித்தான் விரைந்து தரையிலே
அவன் அதற்குள் எழுந்திருந்தான் சின‌த்திலே
அவன் தாக்கினான் முழு வலுவோடு
அதை தடுப்பதே இவனுக்கு பெரும்பாடு

இவனுக்கு மூன்று அவனுக்கு இரண்டென வெட்டுக்கள்
அகமெங்கும் வழிந்திடும் குருதியின் சொட்டுக்கள்
சாரலோடு தென்றலும் சேர்ந்து வீச‌
அதை உணராத நிலையில் இருவிள‌ம் மொட்டுக்கள்

ஞாயிறு பயண‌த்தின் பாதியை அடைந்திட‌
முகில்கள் அதைச்சற்று மறைத்தே நின்றிட‌
வெட்டுண்ட மகாரின் வேதணைக் குரல்கேட்டு
இயற்ககையின் அழுகை சாரலென விழுந்தது

வெட்டுக்களின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டிருக்க‌
குருதியின் இழப்பில் உடல் சோர்ந்து கொண்டிருக்க‌
வாகையெனும் கவர்ச்சி மங்கை
ஒருவனுக்கும் மாலையிடுவதாய்த் தெரியவில்லை

அவன் வாளோங்கி வரும் நிலைகண்டு
தன் தலைக்கே என்றிவன் வாளுயர்த்த‌
அவன் மின்னலின் வேகத்தில் முன் குனிந்து
இவன் வைற்றை எப்போதோ கிழித்திருந்தான்

உயர்த்திய வாளை தரையில் ஊன்றி
மண்டியிட்டு நிலத்தில் சரிந்த பிள்ளை
அந்த சில நொடியின் வேதணையை இவன்
தனது இருபது பிராயதில் கண்டதில்லை

பெற்றவள் முகத்தை இனி பார்பதியலாது
தகப்பனின் அறிவுரை இனி உதவாது
இந்தச் சிந்தனையின் வலி அவன் மனத்திலேற‌
அகத்தின் வலி அவனை விட்டு ஓட‌

குருதி முடிவின் விளிம்பை அடைந்தது
சட்டென அவனது முகம் மலர்ந்தது
பாசறைக்குத் தான் கிள‌ம்பிய போதும்
நல்லவேலை தான் உரைக்கவில்லை

தெரிந்திருந்தால் தவித்திருப்பாள் என் பூங்கொடி
மூச்சுடன் பிரிந்தது உயிரும் அந்நொடி
அந்தோ அவனுக்கு தெரியாமல் போனது
அவள் என்றோ தெரிந்துகொண்டாள் தலைவன் விழியால் சொன்னது

Saturday, March 31, 2012

இனிதே கழிந்தது


சோள‌க் கதிர் சிவந்தாட, கிளிகளைத் துரத்தியே,
பொன்வண்டை பிடிக்கவே, முல்மரங்கள் ஏறியே,
பனங்காய் சக்கரதில், வண்டிகள் செய்தே,
பனம்பழம் எடுத்திடவே, அதிகாலையில் விழித்தே,

கார்த்திகை வந்துவிட்டால், காளான் தேடியே,
மார்கழிக் குளிரிலே, அடுப்படியில் காய்ந்தே,
பங்குனி வெப்பத்தில், கிணறில் நீந்தியே,
சித்திரைக் கார்மழைக்கு, மண்வாசம் ரசித்தே,

இத்துனை ஆண்டுகள் என் கிராமத்தின் அணைப்பில்
என் பிள்ளைப்பருவம் இனிதே கழிந்தது

Monday, March 12, 2012

போராளி


வாழ்வோர் பலர்
கொல்லப் பட்டோர் பலர்
வீண‌க்கப் பட்டோர் பலர்
காவு கொடுக்கப் பட்டோர் பலர்
மதிக்கப் பட்டோர் பலர்
மரக்கப் பட்டோர் பலர்
ஊனமானவர் பலர்
பிறருக்கு சுமையானோர் பலர்
சிலர் எழுதும் பேராசை நூலின்
வரிகள் இந்தப் பலர்

Thursday, March 8, 2012

இழப்பு



எழுந்தாலும் மறைந்தாலும் சிவந்து மலரும்
வான்முகடைக் காண முடிய‌வில்லை
விரல்கள் தலைகோத மடியில் தலை சாய்த்து
அன்னையின் அன்பில் துயில்கொள்ளவில்லை
பொழுது விடிந்ததென்று அறிவிக்கும் சேவலின்
குரல்கேட்டு கண் விழிகக்வில்லை
சுவையும் அலவும் குறைந்தாலும் நிறைந்தாலும்
குடும்பத்துடன் கூடி உணவருந்தவில்லை
வேம்பு மலரின் வாசனை திருடிவரும்
தென்றலின் குலிரணைப்பில் கண்ணுறங்கவில்லை
வயல்வெலியில் ஓடி ஆற்றங்கரையில் கூடி
கவிதைகள் பாடி காதலிக்கவில்லை
பணத்தின் வாசனையில் உயர் நாகரீக மோகத்தில்
இத்துனை இழப்புகளை எண்ணிப் பார்க்க நேரமில்லை

Saturday, March 3, 2012

தலையணை சபித்தது

கொஞ்சும் உன் இடையை அணைத்துக்கொள்ளவா
இனிக்கும் உன் இதழில் முத்தம் பதிக்கவா
நெழியும் உன் கழுத்தில் கூச்சம் நிரப்பவா
சபித்தது என் தலையணை என்னை விடுடா என்று

Wednesday, July 27, 2011

கார்கில்

பிரிந்த தாயிடம் மகன் திரும்பி வரவில்லை,
தாலியின் வயதோ ஒன்றைத் தாண்டவில்லை,
கருவில் குழந்தை, அப்பனை பார்க்கவில்லை,
உலோக துண்டுக்கோ உணர்ச்சி தும் இல்லை,
கசிந்த குருதியை உறிஞ்சிக் குடித்த பின்,
பூமிக்கு தாகமோ சிறிதும் அடங்கவில்லை
காக்க வந்தவனின் வேதனைக் குரல் கேட்டும்,
வீசிய தென்றலுக்கு துளியும் வெட்கமில்லை
எனக்காக சரிந்த அந்த வீரனின் புகழ்பாட,
அவன் முகமும் தெரியவில்லை பெயரும் தெரியவில்லை.

Monday, July 25, 2011

கவிஞன் அல்ல

என்னை எடுத்துச் சொல்ல நீ புரிந்துகொள்ள

என் அருகில் உள்ள உன்னை அணைத்துக்கொள்ள

கவிதை பாடி உன் காதலை வெல்ல

நான் கவிஞன் ல்ல

நான் கவிஞன் ல்ல

பிழை

சிந்தனைகள் தடுமாறும், இதையங்கள் இடம் மாறும்,

சிந்தையோ கல்லாகும், காதலே உளியாகும்,

காலமோ சிற்பியாக, சிலைகள் உருவாகும்

பிழையொன்று ஆன போதும், சிலை என்றும் சிலைதானே

என்னை விட்டுச் சென்ற போதும், என் காதல் மெய்தானே

Monday, January 3, 2011

காற்று

ஒருமுறை எனக்குள் கலந்து,

இரண்டொரு நொடிகள் எனக்கு உயிர் கொடுத்து,

என் இதையத்தை இருமுறை துடிக்கவைத்து,

பிறிந்து சென்றாய், உடைந்து போனேன்,

திரும்பிப் பார்த்து சிரிதாய்

எப்படி மறந்து போனேன்

இதையம் உனக்காக மருபடி விரியும் என்பதை,

காதலுக்கு நீ தங்கை என்பதை

-- சேகர்

Saturday, January 1, 2011

நான் அடிமை

அமைதி ததும்பும் காலை மலர்ந்தவுடன்
காவிப் பெட்டி திறந்து அழகாய் அடுக்கியிருந்த
வெல்லைக் குழல்களிள் ஒன்றை வாயிலே வைத்து
நெருப்புப் பிழம்பால் அழங்கறித்து
கண்களை மூடி ஆழமாய் இழுக்க
பால் நிற உடை அணிந்தாடும்
அழகிய மங்கை ஒருத்தி
நெருப்பிலே பிரந்து, வழைந்து நெழிந்து,
என் தொண்டையில் புகுந்து, சுவாசத்தில் கலந்து,
என் இதயத்தில் தன் முத்தத்தை பதித்து,
மருபடி வறுவேனென்று பொய்வாக்கழித்து
தென்றலில் கலந்து விட,
இனி எரிக்க எதுவும் இல்லையென்று
நெருப்பின் புலம்பல் கேட்டவுடன்
அதை கொன்று விட்டு மெதுவாய்
கண்கள் மூடினேன், அப்போது புரிந்தது,
நான் அடிமை புகைக்கு
--சேகர்

Thursday, November 27, 2008

Wednesday, November 26, 2008


WALLPAPERS - My designs

Tuesday, November 25, 2008


I am posting Some of the Images designed by me.